சொல் பொருள்
பிடித்துவிடல் – அடித்தல்
சொல் பொருள் விளக்கம்
மூட்டு வலி தசைவலி இருந்தால் பிடித்துவிடுவார்; எண்ணெய் மருந்து தேய்த்தல், உருவிவிடல், ‘சுழுக்கு’ எடுத்தல் ஆகியவும் செய்வர். அதுபோல், “ஒருவன் சொன்ன சொல் கேளாவிட்டால் உன்னைப் பிடித்துவிடவேண்டுமா?” என்பர். பிடித்துவிடல் என்பதால் அடித்து வீங்கவைத்தல், நரம்பைச் சுண்டிவிடல் ஆகியன செய்வாராம். அதனால், “சொன்னதைக் கேட்டு ஒழுங்காக நட” என எச்சரித்து விடுகிறாராம். ஈமொய்த்தல், பற்றுப்போடல், தடவிக்கொடுத்தல், தட்டுதல் என்பன இவ்வழிப்பட்டனவே.
இது ஒரு வழக்குச் சொல்
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்