சொல் பொருள்
பிடிமானம் – சிக்கனம்
சொல் பொருள் விளக்கம்
வருமானம், பெறுமானம் என்பவற்றில் வரும் ‘மானம்’ அளவுப் பொருளது. அதுபோல் பிடிமானம் என்பதும் அளவுப் பொருளதே. பிடிமானமானவன் பிடிமானமாகச் செலவிடல் என்பவற்றில் பிடிமானம் என்பதற்குச் சிக்கனப் பொருள் உள்ளமை காண்க. பிடிமானம் என்பது வந்ததையெல்லாம் செலவிட்டு விடாமல்; இறுக்கிப் பற்றி அல்லது சேமித்து வைப்பதாம். ஆன முதலில் அதிகம் செலவாகி மானமழிதல் பிடிமானக்காரர்க்கு
இல்லையாம்.
இது ஒரு வழக்குச் சொல்
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்