சொல் பொருள்
பிடுங்குதல் – இழிவுறுத்தல்
சொல் பொருள் விளக்கம்
பயிரைப் பிடுங்குதல், நடுதல், களைபிடுங்குதல் என்பவை உழவர் பணிகள். ஒருவர் வைத்திருக்கும் பொருளைப் பிடுங்குதல் பறித்தல் என்றும் பொருள்தரும். இப்பிடுங்குதல் பலவகையில் வழக்கில் இருந்தாலும் அவையெல்லாம் நாற்றுப்பிடுங்கல், களை பிடுங்கல், கடலைபிடுங்கல் எனப் பெயர் சுட்டியேவரும். அச்சுட்டு இல்லாமல் பிடுங்குதல் என்று மட்டும் வரின், மயிர் பிடுங்குதல் என்பதையே குறிக்கும். செய்யமாட்டாத ஒருவன் ஒன்றைச் செய்வேன் என்றால் “ஆமாம்; நீ பிடுங்குவாய்; போ” என்பது வழக்கு. உன்னால் முடியாது என இழிவுறுத்தலாக அமைவது இப்பிடுங்குதலாம் . “ நான் என்ன பிடுங்குகிற வேலையா செய்கிறேன்” என்பதிலும் இழிபாடே புலப்பாடாம்.
இது ஒரு வழக்குச் சொல்
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்