சொல் பொருள்
(பெ) 1. பிணவு என்பதன் கடைக்குறை, நாய், பன்றி, மான்,புலி போன்றவற்றின் பெண், 2. பிணம் என்பதன் பெயரடை
சொல் பொருள் விளக்கம்
1. பிணவு என்பதன் கடைக்குறை, நாய், பன்றி, மான்,புலி போன்றவற்றின் பெண்,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
Female of the dog, pig, deer, tiger or yak;
the adjectival form of ‘piNam’, a dead body
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: ஈன்று அணி வயவு பிண பசித்து என மற புலி – அகம் 112/5 குட்டியை ஈன்ற அண்மையினையுடைய வேட்கையையுடைய பெண்புலி பசித்ததாக ஈன்று இளைப்பட்ட வயவு பிண பசித்து என – அகம் 238/2 ஈன்று காவற்பட்ட வேட்கையினுடைய பெண்புலி பசியுற்றதாக பைம் நிணம் கவரும் படு பிண கவலை – அகம் 327/16 பசிய கொழுப்பினைக் கவர்ந்துண்ணும் இடமாய மிக்க பிணங்கள் கிடக்கும் கவர்த்த நெறிகள்
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்