சொல் பொருள்
பூண்டு என்றும், வெள்ளைப் பூண்டு என்றும், வெள்ளுள்ளி என்றும் வழங்கப்படும்.
வெள்ளைப் பூடு விளையும் தோட்டத்தைப் பிணம் என்பது குமரி வட்ட வழக்காகும்
சொல் பொருள் விளக்கம்
தீ நாற்றம் தருவதைப் பிணவாடை என்பது பொது வழக்கு. பூண்டு என்றும், வெள்ளைப் பூண்டு என்றும், வெள்ளுள்ளி என்றும் வழங்கப்படும். வெள்ளைப் பூடு விளையும் தோட்டத்தைப் பிணம் என்பது குமரி வட்ட வழக்காகும். பிணம் எனப் பூண்டு பெயர் பெற்று, அது விளையும் இடம் குறிப்பது. வியப்பான வழக்கம் இது.
குறிப்பு:
இது ஒரு வழக்குச் சொல்
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்