சொல் பொருள்
(பெ) சொரசொரப்பு, சருச்சரை
சொல் பொருள் விளக்கம்
சொரசொரப்பு, சருச்சரை
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
roughness, coarseness, unevenness
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: கார் பெயல் உருமின் பிளிறி சீர் தக இரும் பிணர் தட கை இரு நிலம் சேர்த்தி சினம் திகழ் கடாஅம் செருக்கி மரம் கொல்பு மையல் வேழம் மடங்கலின் எதிர்தர – குறி 162-165 கார்காலத்து மழையின் இடி போல முழக்கத்தையுண்டாக்கி, தன் தலைமைக்குத் தக்கதாக கரிய சொரசொரப்பான பெரிய துதிக்கையை(ச் சுருட்டி) பரந்த நிலத்தே எறிந்து, கோபம் விளங்கும் மதத்தால் மனம் செருக்கி, மரங்களை முறித்து, மதக்களிப்புடைய (அக்)களிறு எமனைப்போல் (எமக்கு)எதிரே வருகையினால்
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்