Skip to content
பித்திகம்

பித்திகம் என்பது பித்திகை, பிச்சிப்பூ, சாதி மல்லிகை, காட்டு மல்லிகை

1. சொல் பொருள்

(பெ) 1. பித்திகை, பிச்சிப்பூ, சாதி மல்லிகை, காட்டு மல்லிகை

2. சொல் பொருள் விளக்கம்

  1. பித்திகைப்பூ அரும்பு சிவப்பாக இருக்கும்
  2. பித்திக மலர் பசுமையான காம்பு கொண்டது

மொழிபெயர்ப்புகள்

3. ஆங்கிலம்

large flowered jasmine, Jasminum angustifolium, Jasminum Gradiflorum.

4. தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு

இது மாலை நேரத்தில் மலரும். பொழுது தெரியாத மழைக்காலத்தில், இது மலர்வதை வைத்து
மாலை நேரத்தை அறிவர்.

செவ்வி அரும்பின் பைம் கால் பித்திகத்து
அ இதழ் அவிழ் பதம் கமழ பொழுது அறிந்து
இரும்பு செய் விளக்கின் ஈர் திரி கொளீஇ
நெல்லும் மலரும் தூஉய் கைதொழுது
மல்லல் ஆவணம் மாலை அயர – நெடு 40-44

(மலரும்)பக்குவத்திலுள்ள மொட்டுக்களின் பசிய காலினையுடைய பிச்சியின்
அழகிய இதழ்கள் கூம்புவிடும் நிலையில் மணக்கையினால், (அந்திப்)பொழுது (என)அறிந்து,
இரும்பினால் செய்த (அகல்)விளக்குகளில் (நெய் தோய்ந்த)ஈரமான திரியைக் கொளுத்தி,
நெல்லையும் மலரையும் சிதறி, (இல்லுறை தெய்வத்தை)கைகூப்பி(வணங்கி),
— வளப்பமுள்ள அங்காடித் தெரு(வெல்லாம்) மாலைக் காலத்தைக் கொண்டாட

இது மாரிக்காலத்தில் பூக்கும்.

மாரி பித்திகத்து ஈர் இதழ் அலரி – நற் 314/3

மாரிக்காலத்துப் பித்திகத்தின் ஈரமான இதழையுடைய பூவை,

செவ்வி அரும்பின் பைம் கால் பித்திகத்து/அ இதழ் அவிழ் பதம் கமழ பொழுது அறிந்து - நெடு 40,41

பைம் கால் பித்திகத்து ஆய் இதழ் அலரி - குறி 117

மாரி பித்திகத்து ஈர் இதழ் அலரி - நற் 314/3

பெரும் தண் மாரி பேதை பித்திகத்து/அரும்பே முன்னும் மிக சிவந்தனவே - குறு 94/1,2

மாரி பித்திகத்து நீர் வார் கொழு முகை - குறு 168/1

மாரி பித்திகத்து நீர் வார் கொழு முகை - குறு 222/5

மலி பெயல் கலித்த மாரி பித்திகத்து/கொயல் அரு நிலைஇய பெயல் ஏர் மண முகை - அகம் 42/1,2

மாரி பித்திகத்து ஈர் இதழ் புரையும் - அகம் 295/19

வஞ்சி பித்திகம் சிந்துவாரம் - குறி 89
பித்திகம்
பித்திகம்
பித்திக கோதை செப்பு வாய் மலரவும் - உஞ்ஞை:33/76

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *