சொல் பொருள்
பின்னுதல் – தொடுத்துக் கூறுதல்; வலுவாக அடித்தல்
சொல் பொருள் விளக்கம்
ஒரு செய்தியைச் சொல்லி அதனைத் தொடர்ந்து, அவனைத் தொடர்ந்து தொடராகச் செய்தி அல்லது கதை கூறுவது பின்னுதல் எனப்படும், பன்னுதலும் பலகாலும் சொல்வதேனும் அதில் தொடர்புறுதல் இல்லை. பின்னுதல் தொடர்புறு செய்தியாக அமையும், “பின்னி எடுத்துவிட்டான் பின்னி” என்பதில் கடுமையாக அடித்தல் பொருள் உண்டு. ஒரு செய்தியை ஒருவர் சொல்லும்போது அவருக்குத்தோதான குறிப்புகளை ஊடே ஊடே எடுத்துத் தருதலும் பின்னுதலாகச் சொல்லப்படும். கயிறு பின்னுதல் என்பது கயிறு திரித்தல். ‘கயிறுதிரித்தல், சரடு உருட்டல்’ காண்க.
இது ஒரு வழக்குச் சொல்
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்