சொல் பொருள்
பின்பாட்டுப்பாடுதல் – ஒத்துப் பேசுதல்
சொல் பொருள் விளக்கம்
முன்பாட்டின் போக்குக்கு ஏற்பப் பின்பாட்டுப் பாடுதலே பொருந்திய இசையாகும். அஃது இசைத்துறை நடைமுறை. இவண் முன்பாட்டு என்பத முதற்கண் பாடுபவரைக் குறியாமல் முதற்கண் ஒரு செய்தியைக் கூறுவாரைக் குறிக்கிறது. பின்பாட்டு என்பது முதற்கண் செய்தியைக் கூறுபவர் குறிப்புக்குத் தகத் தகப்பின்னே பேசுவாரைக் குறித்தது. “ஒட்டி அடிடா உள்ளூர்க் கோடாங்கி அணைத்துப் புளுகடா அயலூர்க் கோடாங்கி” என்னும் பழமொழிக்கு ஒப்ப ஒட்டியும் அணைத்தும் பேசுவது பின்பாட்டும் முன்பாட்டுமாம்.
இது ஒரு வழக்குச் சொல்
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்