சொல் பொருள்
தாமாகப் பேசுதல், சிரித்தல், அழுதல் ஆயவை செய்வாரைப் பிரி கழன்றவர் என்பது நெல்லை வழக்கு
பிரி என்பதே கிறுக்கு என்னும் பொருளில் வழங்குகின்றது.
சொல் பொருள் விளக்கம்
தாமாகப் பேசுதல், சிரித்தல், அழுதல் ஆயவை செய்வாரைப் பிரி கழன்றவர் என்பது நெல்லை வழக்கு. மூளைக் கோளாறு, கிறுக்கு என்பது பொருளாம். பிரி என்பது கிறுக்கு என்னும் பொருளில் குமரி மாவட்ட வழக்காக உள்ளது. பிரி என்பதன் மூலப் பொருள் (கழறுதல்) அளவில் அமைந்த ஆட்சி அது. பிரி என்பதே கிறுக்கு என்னும் பொருளில் வழங்குகின்றது.
குறிப்பு:
இது ஒரு வழக்குச் சொல்
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்