சொல் பொருள்
(வி) வெளிவிடு,
சொல் பொருள் விளக்கம்
வெளிவிடு,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
let out, as milk from the udder; to spill;
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: திதலை மென் முலை தீம் பால் பிலிற்ற புதல்வன் புல்லி புனிறு நாறும்மே – நற் 380/3,4 தேமல் படிந்த மென்மையான கொங்கைகளின் இனிய பால் சுரந்து வழிய புதல்வனை அணைத்துக்கொள்வதால் புனிற்றுப் புலவு நாறுகின்றது; பதவு மேயல் அருந்து மதவு நடை நல் ஆன் வீங்கு மாண் செருத்தல் தீம் பால் பிலிற்ற கன்று பயிர் குரல மன்று நிறை புகுதரும் – அகம் 14/9-11 அறுகம்புல் மேய்ச்சலில் உணவருந்திய செருக்கிய நடையுடைய நல்ல ஆனினங்கள் பருத்த மாண்புடைய மடி இனிய பாலைப் பொழிய, கன்றை நினைத்து அழைக்கும் குரலையுடையவாய் மன்றத்தில் கூட்டமாய்ப் புகுகின்ற
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்