சொல் பொருள்
(வி) 1. (யானை) பேரொலி எழுப்பு
2. யானையைப் போல் முழக்கமிடு
சொல் பொருள் விளக்கம்
1. (யானை) பேரொலி எழுப்பு
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
trumpet
make a loud noise like the roar ofan elephant
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: பெரும் களிறு பிளிறும் சோலை – நற் 222/9 பெரிய ஆண்யானை முழக்கமிடும் சோலை வெண்ணெல் அரிநர் பின்றை ததும்பும் தண்ணுமை வெரீஇய தடம் தாள் நாரை செறி மடை வயிரின் பிளிற்றி – அகம் 40/13-15 வெண்ணெல்லை அரிவோரின் பின்னே நிறைந்து ஒலிக்கும் தண்ணுமைப் பறையின் ஓசைக்கு அஞ்சிய நீண்ட கால்களையுடைய நாரை செறிந்த மூட்டுவாயினை உடைய கொம்புவாத்தியம் போல் பிளிற்றி கரும்பின் எந்திரம் களிற்று எதிர் பிளிற்றும் தேர் வண் கோமான் தேனூர் – ஐங் 55/1,2 கரும்பினைப் பிழியும் எந்திரமானது களிறு பிளிறும் குரலுக்கு எதிராக ஒலிக்கும் தேரினையும், வள்ளண்மையையும் கொண்ட பாண்டியனின் தேனூர் கார் பெயல் உருமின் பிளிறி சீர் தக – குறி 162 கார்காலத்து மழையின் இடி போல முழக்கத்தையுண்டாக்கி பேய் கண் அன்ன பிளிறு கடி முரசம் – பட் 236 பேயின் கண்ணை ஒத்த, முழங்குகின்ற காவலையுடைய முரசம்
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்