சொல் பொருள்
பீடம் தெரியாமல் ஆடல் – இடம் தெரியாமல் பேசல்
சொல் பொருள் விளக்கம்
சாமி வைக்கின்ற மேடான சதுக்கம் பீடம் எனப்படும். பீடு – உயர்வு, பீடம் உயர்ந்த தளம். ஒவ்வொரு சாமிக்கும் ஒவ்வொரு பீடம் உண்டு. அவ்வப் பீடத்துக்குத் தக்கவாறு சாமியாடல் வேண்டும். மருளாடி அப்படித் தக்கவகையில் அருள் வாக்குக் கொடுக்கும் தேர்ச்சி பெற்றிருப்பான். அப்பயிற்சி இல்லான் அல்லது புதுவன், பீடம் தெரியாமல் சாமியாடி அருள் வாக்குத் தந்தால் கேட்பவர்க்கு உண்மை புலப்பட்டு விடும். அவ்வழக்கில் இருந்து பீடம் தெரியாமல் சாமியாடல் என்பது உண்டாயிற்று. யாரிடமோ சொல்ல வேண்டியதை யாரிடமோ சொல்லல் என்பது அத்தொடரின் பொருளாம்.
இது ஒரு வழக்குச் சொல்.
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்