சொல் பொருள்
(பெ) 1. குற்றம், 2. புள்ளி, 3. கஞ்சி, 4. கபில நிற காளை,
சொல் பொருள் விளக்கம்
1. குற்றம்,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
fault, blemish, defect, spot, rice-water used as starch, tawny coloured bull
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: தகரன் மஞ்ஞையன் புகர் இல் சேவல் அம் கொடியன் நெடியன் தொடி அணி தோளன் – திரு 210,211 கிடாயையும், மயிலையும் உடையவன், குற்றமில்லாத கோழிக் கொடியை உடையவன், நெடுக வளர்ந்தவன், தொடியை அணிந்த தோளையுடையவன், புகர் வாய் குழிசி பூ சுமட்டு இரீஇ – பெரும் 159 (தயிர்)புள்ளிபுள்ளியாகத் தெரிந்த வாயையுடைய மோர்ப்பானையை மெல்லிய சுமட்டின் மேல் வைத்து புகா புகர் கொண்ட புன் பூ கலிங்கமொடு – நற் 90/4 சோற்றுக் கஞ்சி தோய்க்கப்பெற்ற சிறிய பூவேலைப்பாடு கொண்ட ஆடையோடு கணம்_கொள் பல் பொறி கடும் சின புகரும் – கலி 105/16 பேரளவிலான பலவித புள்ளிகளைக் கொண்ட பெருங்கோபமுள்ள புகர்நிறக் காளையும்
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்