சொல் பொருள்
(வி) 1. மறை, மூடு, 2. மண்ணில் அழுத்தில் உட்செலுத்து, 2. (பெ) அம்புக்கட்டு
சொல் பொருள் விளக்கம்
1. மறை, மூடு,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
conceal, cover, bury, intern, bundle of arrows
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: அடி புதை அரணம் எய்தி படம் புக்கு – பெரும் 69 பாதங்களை மறைக்கின்ற செருப்பைக் கோத்து, சட்டை அணிந்து நிலம் புதை பழுனிய மட்டின் தேறல் – புறம் 120/12 நிலத்தின்கண் புதைக்கப்பட்ட முற்றிய மதுவாகிய தேறலை வாயிலொடு புழை அமைத்து ஞாயில்-தொறும் புதை நிறீஇ – பட் 287,288 பெரிய வாயில்களுடன் சிறு வாசல்களையும் உண்டாக்கி, கோட்டை முகப்புத்தோறும் (மறைந்தெறியும்)அம்புக்கட்டுக்களைக் கட்டிவைத்து
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்