சொல் பொருள்
(பெ) மலைச்சார்பான கொல்லை, வானம்பார்த்த பூமி,
சொல் பொருள் விளக்கம்
மலைச்சார்பான கொல்லை, வானம்பார்த்த பூமி,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
upland fit for dry cultivation
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: புலந்து புனிறு போகிய புனம் சூழ் குறவர் – மலை 203 காய்ந்து, பிஞ்சுத்தன்மை நீங்கிய(பிஞ்சுத்தன்மை நீங்கிக் காய்ந்த) தினைப்புனத்தைச் சுற்றிவந்த குறவர்கள், சிறுதினை விளைந்த வியன் கண் இரும் புனத்து – குறு 375/3 சிறுதினை விளைந்த அகன்ற இடமுடைய பெரிய தினைப்புனத்தில் இரும்பு கவர்வு_உற்றன பெரும் புன வரகே – மலை 113 (இரும்பாலாகிய)அரிவாள் வசப்பட்டன(=அரிதலுற்றன) பெரிய கொல்லைக்காட்டின் வரகுகள்;
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்