சொல் பொருள்
(பெ) 1. வேலைப்பாடு, உருவாக்கம், 2. ஒப்பனை, அலங்காரம்,
சொல் பொருள் விளக்கம்
1. வேலைப்பாடு, உருவாக்கம்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
workmanship, making
ornamentation, decoration
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: புணர் நார் பெய்த புனைவு இன் கண்ணி – பெரும் 218 முடிந்த நாரால் கட்டிய உருவாக்கம் இனிதான மாலையை புனையா ஓவியம் கடுப்ப புனைவு இல் தளிர் ஏர் மேனி தாய சுணங்கின் ———————– ———————— —————– செம் முக செவிலியர் கைம்மிக குழீஇ – நெடு 147-153 முற்றுப்பெறாத கோட்டுச் சித்திரத்தை ஒப்ப(தலைவி அமர்ந்திருக்க) – ஒப்பனை இல்லாத, மாந்தளிரைப் போன்ற நிறத்தினையும், பரந்த அழகுத் தேமலையும், ——————— ——————————- ——————————- சிவந்த முகத்தையுடைய செவிலித்தாயர் அளவுக்குமீறித் திரண்டு,
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்