சொல் பொருள்
(பெ) 1. காப்பாளன், ஆதரிப்பவன், அரசன்,
சொல் பொருள் விளக்கம்
1. காப்பாளன், ஆதரிப்பவன்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
patron, benefactor, king
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: பாடுநர் புரவலன் ஆடு நடை அண்ணல் – பதி 86/8 பாடிவரும் பாணர், புலவர் ஆகியோரின் பாதுகாவலன் இந்த அசைந்த நடையையுடைய அண்ணல் நெருநல் எல்லை ஏனல் தோன்றி திரு மணி ஒளிர்வரும் பூணன் வந்து புரவலன் போலும் தோற்றம் உறழ் கொள இரவல் மாக்களின் பணிமொழி பயிற்றி – அகம் 32/1-4 நேற்றுப் பகலில் தினைப்புனத்தில் தோன்றி, அழகிய மணிகள் ஒளிரும் அணிகளைப் பூண்டவனாய் வந்து, அரசன் போன்ற (தனது)தோற்றத்துக்கு மாறாக இரத்தல் செய்யும் மக்களைப் போல பணிவான சொற்களைப் பலமுறை கூறி,
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்