சொல் பொருள்
(இ.சொ) ஓர் உவம உருபு, (பெ) உயர்வானது, (வி.அ) மேன்மையுற
சொல் பொருள் விளக்கம்
ஓர் உவம உருபு,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
a particle of comparison, an object with excellence, to be excellent
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: ஆடு இயல் பெரு நாவாய் மழை முற்றிய மலை புரைய துறை முற்றிய துளங்கு இருக்கை – மது 83-85 அசையும் இயல்பினையுடைய பெரிய மரக்கலங்கள் – மேகங்கள் சூழ்ந்த மலையைப் போல துறைகள் சூழ்ந்த – அசைகின்ற இருக்கையினையும் சாந்தில் தொடுத்த தீம் தேன் போல புரைய மன்ற புரையோர் கேண்மை – நற் 1/4,5 சந்தனமரத்தில் சேர்த்துக்கட்டிய இனிய தேன்கூடு போல மேன்மையானது சிறந்தவர்களின் நட்பு அரையுற்று அமைந்த ஆரம் நீவி புரைய பூண்ட கோதை மார்பினை – அகம் 100/1,2 நறுமணம் கூட்டி அரைக்கப்பெற்று முடிந்த சந்தனத்தைப் பூசி உயர்வுற மாலையினைப் பூண்ட மார்பினையுடையையாய்
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்