Skip to content

சொல் பொருள்

(பெ) 1. தோற்று ஓடுகை, 2. திரும்பிச்செல்லுதல்

சொல் பொருள் விளக்கம்

1. தோற்று ஓடுகை

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

turning the back in the battle field, going back

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

ஒடுங்கா தெவ்வர் ஊக்கு அற கடைஇ
புறக்கொடை எறியார் நின் மற படை கொள்ளுநர் – பதி 31/32,33

அடங்காத பகைவரின் ஊக்கம் கெடும்படியாக விரட்டி
அவர் தோற்றோடுகையில் (அவரின் முதுகினில்) வேல்களை வீசியெறியமாட்டார் –
உன் வீரம் மிக்க சேனைக்குத் தலைமைகொள்பவர்

சிறப்பு செய்து உழையரா புகழ்பு ஏத்தி மற்று அவர்
புறக்கொடையே பழி தூற்றும் புல்லியார் தொடர்பு போல் – கலி 25/15,16

சிறப்புகள் பல செய்து அருகிலிருந்து புகழ்ந்து பாராட்டிவிட்டு, அவர்
புறத்தே அகன்று செல்லுகையில் பழி தூற்றுகின்ற புன்மையாளர் போல

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *