சொல் பொருள்
(பெ) 1. இறைச்சி, மாமிசம், ஊன், மீன், 2. இறைச்சி நாற்றம்,
சொல் பொருள் விளக்கம்
1. இறைச்சி, மாமிசம், ஊன், மீன்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
raw meat, flesh, fish, smell of raw meat or fish
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: பூ ஆர் காவின் புனிற்று புலால் நெடு வேல் – புறம் 99/6 பூ நிறைந்த சோலையினையும், புதிய ஈரம் புலராத தசையினையுடைய நெடிய வேலினையுமுடைய பூத்த மாஅத்து புலால் அம் சிறு மீன் – ஐங் 10/4 பூத்த மாமரங்களையும், புலால் நாறும் சிறுமீன்களையும் உடைய
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்