சொல் பொருள்
(வி.வி.மு) தழுவவேண்டாம், (பெ) தழுவுதல்
சொல் பொருள் விளக்கம்
தழுவவேண்டாம்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
do not embrace, embracing
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: புல்லல் எம் புதல்வனை புகல் அகல் நின் மார்பில் பல் காழ் முத்து அணி ஆரம் பற்றினன் பரிவானால் மாண் இழை மட நல்லார் முயக்கத்தை நின் மார்பில் பூணினால் குறிகொண்டாள் புலக்குவள் அல்லளோ – கலி 79/11-14 தழுவவேண்டாம் எம் புதல்வனை! பரத்தையர் கொண்டாடும் அகன்ற உன் மார்பில் கிடக்கும் பல வடங்களையுடைய முத்துக்கள் கோத்த மாலையைப் பிடித்து அவன் அறுத்துவிட்டால், மாட்சிமைப்பட்ட அணிகலனையுடைய இளைய மகளிர் உன்னைத் தழுவினார் என்று உன் மார்பில் கிடக்கும் அந்த அணிகலனால் அறிந்துகொண்டவளாய் அவள் கோபித்துக்கொள்ளமாட்டாளோ? கொல் ஏறு கொண்டான் குருதி மயக்கு_உற புல்லல் எம் தோளிற்கு அணியோ எம் கேளே – கலி 106/38,39 கொலைகாரக் காளையை அடக்கியவனின் குருதி கலந்து தோயத் தழுவிக்கொள்ளுதல் என்னுடைய தோளுக்கு அழகல்லவோ! என் தோழியே
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்