சொல் பொருள்
புளித்தல் – வெறுத்தல்
சொல் பொருள் விளக்கம்
புளிப்பு ஒரு சுவை. புளியில் இருந்து புளிப்பு வருதல் வெளிப்படை. புளியமரம் பழமையானது. ‘புளி ஆயிரம் பொந்து ஆயிரம்’ என ஈராயிர ஆண்டு வாழ்வுக்கு உரியதாகப் பழமொழி கூறும். இப்புளி, புளிச்சுவையைத் தருவதுடன் ‘வெறுப்பை’யும் தருவதாயிற்று. “உன் பேச்சைக் கேட்டுக் கேட்டுப் புளித்துப் போய்விட்டது” என்பதும், “அந்தப் புளியை இங்கே கரைக்காதே” என்பதும் வெறுப்பின் வழிப்பட்ட வழக்குகள். இவ்வாறே கசப்பு, கைப்பு, துவர்ப்பு என்பனவும் வெறுப்புப் பொருள் தருவனவாக வழங்குகின்றன. இச்சுவைகள் சற்றேமிகுவதாயினும் வெறுப்புண்டாக்கலின் அப்பொருள் வந்திருக்க வேண்டும்.
இது ஒரு வழக்குச் சொல்.
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்