சொல் பொருள்
பூசை வைத்தல் – அடித்தல்
சொல் பொருள் விளக்கம்
வழிபாட்டில் சிறுதெய்வ வழிபாடு ஒன்று, அவ்வழிபாடு சாமியாடல் வெறியாடல் உயிர்ப் பலியிடல் என்பனவெல்லாம்கொண்டது. உயிர்ப்பலியிடல் சட்டத்தால் இக்கால் தடுக்கப்படினும் முற்றாகத் தடுக்கப்பட்டிலது. சாமியாடுவான் சாமியாடி. அவன் கையில் சாட்டைக்கயிறு இருக்கும். அதனைச் சுழற்றிப் பேரொலியுண்டாகத் தன் மேல் அறைந்துகொண்டு ஆவேசமாகி ஆடுவான். தெய்வ வாக்குச் சொல்வான். அவ்வழக்கில் இருந்து பூசைவைத்தல் என்பதற்கு அடித்தல் பொருள் வந்தது. பூசைபோடுதல் என்பதும் அதுவே, “உனக்குப் பூசை போட்டால் தான் குனிய நிமிர முடியும்” என்பதில் கட்டளைக்குப் படியாததை அடியால் படியவைக்கும் முனைப்பு வெளிப்படும்.
இது ஒரு வழக்குச் சொல்.
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்