சொல் பொருள்
பூட்டை என்பது சால் என்னும் நீர் இறை பொறி.
பூட்டைக் கிணறு.(Well fitted with picottah, for irrigating fields)
கேழ்வரகு, சோளக் கதிர்
சொல் பொருள் விளக்கம்
நீர் இறைவைப் பொறிகளுள் ஒன்று பூட்டை. இதனைப் பூட்டைப் பொறி என்பர். கால், ஆறு இல்லாத வானம் பார்த்த நிலத்தில் கிணறு வெட்டி, பூட்டைப் பொறியிடல் வழக்கம். இனி, கேழ்வரகு, சோளக் கதிர்களைப் பூட்டை என்பது நெல்லை முகவை வழக்கம். பூட்டை திருடி என்பது பழிச்சொல். பேரையூர் வட்டார வழக்கில் பூட்டை எனப்படும் இலக்கிய வழக்குச் சொல் ஆளப்படுகிறது. பூட்டை என்பது சால் என்னும் நீர் இறை பொறி.
பூட்டைக் கிணறு என்பது கமலை நீர்ப் பாய்ச்சும் அமைப்புள்ள கிணறாகும். ஏற்றம் வைத்து நீர் பாய்ச்சும்போது ஏற்றம், குற்றேற்றம், நெட்டேத்தம், கூடையேற்றம், பெட்டி இறைப்பு, கமலை, ஆளேற்றம் என இவற்றில் பலவகைகள் இருந்தன.
பூட்டை உருளை கொண்டு கமலை நீர் பாய்ச்சத் தோண்டிய கிணறு பூட்டைக் கிணறு.
குறிப்பு:
இது ஒரு வழக்குச் சொல்
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்