Skip to content

சொல் பொருள்

(பெ) 1. பெண், 2. காதலி, 3. மனைவி,  4. காமக்கிழத்தி, காதற்பரத்தை

சொல் பொருள் விளக்கம்

பெண்,

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

woman, lady love, wife, concubine

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

முதுவாய் பெண்டின் செது கால் குரம்பை – அகம் 63/14

முதிய பெண்ணின் சோர்ந்த கால்களையுடைய குடிசையில்

நென்னல்
ஓங்கு திரை வெண் மணல் உடைக்கும் துறைவற்கு
ஊரார் பெண்டு என மொழிய – ஐங் 113/1-3

நேற்று,
உயர்ந்தெழும் கடலலைகள் வெள்ளிய மணல் மீது மோதி உடைக்கும் துறையைச் சேர்ந்தவனுக்கு
இந்த ஊரார் நான் காதலி என்று கூற

துறை கேழ் ஊரன் பெண்டு தன் கொழுநனை
நம்மொடு புலக்கும் என்ப – அகம் 106/5,6

துறை பொருந்திய ஊரனின் மனைவி, தன் கணவனை
நாம்மோடு கூட்டிவைத்து வெறுத்துப்பேசுகின்றாள் என்பர்

கண்டனெம் அல்லமோ மகிழ்ந நின் பெண்டே – ஐங் 69/1

நேராகவே பார்த்துவிட்டேன் தலைவனே! உன் காதற் பரத்தையை;

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *