சொல் பொருள்
(பெ) திருப்பித்தருதல்
சொல் பொருள் விளக்கம்
திருப்பித்தருதல்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
giving back
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: புரிபு நீ புறம்மாறி போக்கு எண்ணி புதிது ஈண்டி பெருகிய செல்வத்தான் பெயர்த்தரல் ஒல்வதோ செயலை அம் தளிர் ஏய்க்கும் எழில் நலம் – கலி 15/10-12 பொருள்மீது விருப்பம் கொண்டு, நீ இவளைக் கைவிட்டுப் போக எண்ணி, புதிதாகச் சேர்த்துப் பெருகிய செல்வத்தால் மீட்டுத்தருவது இயலுமோ அசோக மரத்தின் அழகிய தளிரைப் போன்றது இவளின் எழில் நலத்தை?
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்