சொல் பொருள்
1. (வி.அ) 1. பெரிதும், 2. அதிகமாக, மிகவும்,
2. (பெ) 1. அதிகமானது, உயர்வானது, 2. நெடுங்காலம்
சொல் பொருள் விளக்கம்
(வி.அ) 1. பெரிதும்,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
greatly, intensively, something large, big, wide, great, eminent, long
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: விரை உறு நறு மலர் ஏந்தி பெரிது உவந்து – திரு 188 (வாசனைப்புகை முதலியவற்றால்)வாசனையேற்றப்பட்ட மணமுள்ள பூவை எடுத்துத் தூவி, பெரிதும் மகிழ்ந்து, வருந்துவள் பெரிது என அரும் தொழிற்கு அகலாது – ஐங் 499/3 வருந்துவாள் மிகவும் என்று அரிய போர்த்தொழிலுக்குச் செல்லாமல் அன்பு பெரிது உடைமையின் அளித்தல் வேண்டி பகலும் வருதி – நற் 223/2,3 அன்பு பெரிதாக உடைமையினாலே இவளுக்குக் கருணைகாட்டல் வேண்டி பகலிலும் வருகிறாய்; வாழிய பெரிது என்று ஏத்தி – திரு 39 வாழ்வதாக, நெடுங்காலம்’, என்று வாழ்த்தி
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்