சொல் பொருள்
1. (வி) 1. பெயர், திரும்பிச்செல், 2. இடம்பெயர், தள்ளிச்செல், 3. பெயர், நீங்கு,
2. (பெ.அ) பெரிய, உயர்ந்த, சிறந்த
3. (பெ) பெயர்,
சொல் பொருள் விளக்கம்
1. பெயர், திரும்பிச்செல்,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
return, change one’s location, move, leave, depart, large, great. immense, name
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: நீயும் தேரொடு வந்து பேர்தல் செல்லாது – நற் 300/7 நீயும் அவனோடு தேருடன் வந்து திரும்பிச் செல்லாமல், யாரீரோ என் விலங்கியீர் என மூரல் முறுவலள் பேர்வனள் நின்ற – அகம் 390/14,15 நீவிர் யாவிரோ எம்மைத் தடுப்பீர் என்று இளநகையுடையாளாய்ச் சிறிது இடம்பெயர்ந்து நின்ற கார் எதிர் பருவம் மறப்பினும் பேரா யாணர்த்தால் வாழ்க நின் வளனே – பதி 24/29,30 கார்காலம் எதிர்ப்படுகின்ற தன் பருவத்தை மறந்துபோனாலும் – நீங்காத புதுமையையுடையது, வாழ்க! உன் வளம்! அறாஅ யாணர் அகன் தலை பேர் ஊர் – பொரு 1 இடையறாத (செல்வ)வருவாயினையுடைய அகன்ற இடத்தையுடைய பெரிய ஊர்களிடத்து நாடு எனும் பேர் காடு ஆக – மது 156 நாடு என்னும் பெயர்(போய்) காடு என்னும் பெயராக, யாரீரோ என பேரும் சொல்லான் – புறம் 150/23 நீர் யார் என கேட்ப பெயரும் சொல்லிற்றிலன்
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்