சொல் பொருள்
(பெ) பஞ்சாய், ஒரு கோரைப்புல் வகை,
பார்க்க : பஞ்சாய்
சொல் பொருள் விளக்கம்
பஞ்சாய், ஒரு கோரைப்புல் வகை,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
A grass, cyperus rotundus tuberosus
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: பைஞ்சாய் பாவை ஈன்றனென் யானே – ஐங் 155/5 நான் பஞ்சாய்க் கோரைப் பாவையாகிய பிள்ளையை ஏற்கனவே பெற்றுவிட்டேன். அயத்து வளர் பைஞ்சாய் முருந்தின் அன்ன நகை பொலிந்து இலங்கும் எயிறு கெழு துவர் வாய் – அகம் 62/1,2 பள்ளத்துநீரில் வளரும் பைஞ்சாய்க் கோரைத் தண்டின் அடிப்பகுதியை ஒத்த ஒளி சிறந்துவிளங்கும் பற்கள் பொருந்திய பவளம் போன்ற வாயினையும்,
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்