சொல் பொருள்
(வி.அ) 1. மெதுவாக, 2. மெல்லென,
மெதுவாக, மெல்ல, பொறுமையாக
சொல் பொருள் விளக்கம்
பைய என்பது மெதுவாக, மெல்ல என்னும் பொருளில் வழங்கும் தென்னக வழக்குச் சொல். திருச்சி புதுவை முதலாய இடங்களில் பொறுமையாக என வழங்கும் சொல், மெல்ல மெதுவாக எனப் பொருள்கொண்டு வழங்குகின்றது. மற்றை இடங்களில் பொறுமை பொறுத்துக் கொள்வதாம் பண்புப் பெயர் ஆகும்.
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
slowly, gently
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: மை அணல் காளையொடு பைய இயலி பாவை அன்ன என் ஆய் தொடி மடந்தை சென்றனள் – ஐங் 389/2-4 கரிய தாடியைக் கொண்ட காளையோடு மெதுவாக நடந்துகொண்டு கொல்லிப்பாவை போன்ற என் அழகிய வளையல் அணிந்த சிறுபெண் சென்றாள் பசும்பொன் அவிர் இழை பைய நிழற்ற – ஐங் 74/2 பைம்பொன்னாலான ஒளிவிடும் அணிகலன்கள் மெல்லென ஒளிவீச
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
இது ஒரு வழக்குச் சொல்
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்