சொல் பொருள்
பொங்கல் வைத்தல் – கொலைபுரிதல், அழித்தல்
சொல் பொருள் விளக்கம்
பொங்கலுள் தைப்பொங்கல் உயிர்ப்பலியற்றது. மற்றைப் பொங்கல்கள் அதிலும் குறிப்பாகச் சிற்றூர்ச் சிறு தெய்வப் பொங்கல்கள் உயிர்க் கொலைக்குப் பேரிடமாக இருந்தவை. உயிர்ப்பலித் தடைச்சட்டம் வந்த பின்னரும் கூட முற்றாகத் தடுத்துவிட முடியாத அளவு வெறிக்கொலைக்கு இடமாக இருப்பவை. இவ்வழக்கில் இருந்தே பொங்கல் வைத்தல் என்பதற்குக் கொலைபுரிதல் பொருள் வந்தது. மனிதரைப் பலியூட்டிய வரலாறும் உண்டு என்பது இந்நூற்றாண்டிலும் கூட ஆங்காங்கு நடக்கும் கயமைகளால் அறியப்படுவதே. “உன்னைப் பொங்கல் போடுவோமா?” என்பது கொலை வினா.
இது ஒரு வழக்குச் சொல்.
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்