சொல் பொருள்
(வி.அ) எல்லாரும் சேர்ந்து
சொல் பொருள் விளக்கம்
எல்லாரும் சேர்ந்து
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
all people together (in common)
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: இது ஆகும் இன் நகை நல்லாய் பொதுவாக தாம் கொடி அன்ன தகையார் எழுந்தது ஓர் பூ கொடி வாங்கி இணர் கொய்ய ஆங்கே சினை அலர் வேம்பின் பொருப்பன் பொருத முனை அரண் போல உடைந்தன்று அ காவில் துனை வரி வண்டின் இனம் – கலி 92/24-29 “இது சரி, இனிக்கும் சிரிப்பினைக் கொண்ட நல்லவளே! எல்லாரும் சேர்ந்து தாமே கொடிபோன்றிருக்கும் அந்த மங்கையர், தாவி எழுந்து ஒரு பூங்கொடியை வளைத்துப் பிடித்துப் பூங்கொத்துக்களைக் கொய்ய, அப்பொழுது கிளைகளில் மலர்கள் மலர்ந்த வேப்பம்பூவினுக்குரிய பாண்டியன் போரிட்ட போர்க்களத்தில் பகைவரின் பாதுகாப்புப் போல உடைந்து சிதறியது அந்த சோலையில் இருந்த விரைகின்ற, வரியினையுடைய வண்டுக்கூட்டம்;
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்