சொல் பொருள்
(பெ) 1. பொறுத்தல், தாங்குதல், 2. சுமை, பாரம், 3. பொறுமை, 4. குன்று, 5. பாறை 6. போற்றாரைப் பொறுத்தல்,
சொல் பொருள் விளக்கம்
பொறுத்தல், தாங்குதல்,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
enduring, forbearing, burden, load, patience, forbearance, small hill, hillock, rock, forbearing those who don’t praise
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: பூ குழை ஊசல் பொறை சால் காதின் – பொரு 30 பொலிவினையுடைய மகரக்குழையினுடைய அசைவினைப் பொறுத்தல் அமைந்த காது தடவு நிலை பலவின் முழு முதல் கொண்ட சிறு சுளை பெரும் பழம் கடுப்ப மிரியல் புணர் பொறை தாங்கிய வடு ஆழ் நோன் புறத்து அணர் செவி கழுதை சாத்தொடு வழங்கும் – பெரும் 77-80 வளைந்த நிலைமையினையுடைய பலாமரத்தின் அடிப்பகுதியில் குலைகொண்ட சிறியதாகிய சுளையினையுடைய பெரிய பழத்தை ஒப்ப, மிளகின் ஒத்த கனமாகச் சேர்ந்த சுமையைத் தாங்கிய, வடு அழுந்தின வலிமையான முதுகினையும், உயர்த்திய செவியினையும் உடைய கழுதைகளுடைய திரளோடே – செல்கின்ற முல்லை நுண் முகை அவிழ்ந்த புறவின் பொறை தலைமணந்தன்று உயவும்-மார் இனியே – நற் 59/8-10 முல்லையின் நுண்ணிய அரும்பு மலர்ந்த புறவின்கண்ணதாகிய ஊரிலிருந்தாலும் அவளுள்ளம் பொறுமையைக் காத்துநிற்கிறது, இனியும் தாமதித்தால் மிகவும் வருந்துவள். குறும் பொறை அயல நெடும் தாள் வேங்கை – நற் 157/8 சிறிய குன்றுகளை அடுத்து இருக்கும் நீண்ட அடிமரத்தையுடைய வேங்கைமரத்தின் கழை கண் இரும் பொறை ஏறி விசைத்து எழுந்து குற குறு_மாக்கள் தாளம் கொட்டும் அ குன்றகத்ததுவே குழு மிளை சீறூர் – நற் 95/5-7 பெரிய பாறையின் கண்ணுள்ள மூங்கில் மீது ஏறி விசைத்து எழுந்து குறவர்களின் சிறுவர்கள் தாளம் கொட்டும் அந்தக் குன்றின் அகத்தது கூட்டமான காவற்காடு சூழ்ந்த சிற்றூர்; பொறை எனப்படுவது போற்றாரை பொறுத்தல் – கலி 133/14 பொறை எனப்படுவது தம்மைப் போற்றாதவரையும் பொறுத்துக்கொள்ளுதல்,
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்