சொல் பொருள்
(வி.எ) பொலிவுபெற, அழகுற, (உவம உருபு) போல
சொல் பொருள் விளக்கம்
பொலிவுபெற, அழகுற,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
magnificently, gracefully, like
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: மின் உறழ் இமைப்பின் சென்னி பொற்ப நகை தாழ்பு துயல்வரூஉம் வகை அமை பொலம் குழை – திரு 85,86 மின்னலுக்கு மாற்றாகும் சிமிட்டலுடன் தலையில் பொலிவுபெற ஒளி தங்கி அசையும் வகையாக(-நன்றாக) அமைந்த பொன்னாலான மகரக்குழை கார் மழை முன்பின் கைபரிந்து எழுதரும் வான் பறை குருகின் நெடு வரி பொற்ப கொல் களிறு மிடைந்த பல் தோல் தொழுதியொடு – பதி 83/1-3 கரிய மேகங்களுக்கு முன்பாக, ஒழுங்கு குலைந்து எழுகின்ற வெண்மையான சிறகுகளைக் கொண்ட கொக்குகள் பின்பு நீண்ட வரிசையாய்ச் செல்வதைப் போன்ற கொல்லுகின்ற யானைப்படைகளினூடே செறிந்து கலந்த பலவான கேடகப் படையுடன்
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்