சொல் பொருள்
(பெ) அழகு, பொலிவு,
சொல் பொருள் விளக்கம்
அழகு, பொலிவு,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
beauty, loveliness, magnificience, excellence
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: துய் தலை முடங்கு இறா தெறிக்கும் பொற்பு உடை குரங்கு உளை புரவி குட்டுவன் – அகம் 376/16,17 துய்யினைத் தலையிலே உடைய வளைந்த இறாமீன் பாயும் இடமான, அழகு பொருந்திய வளைந்த பிடரி மயிரினையுடைய குதிரைகளையுடைய குட்டுவனது பொற்பு விளங்கு புகழ் அவை நின் புகழ்ந்து ஏத்த – மது 778 பொலிவு விளங்குகின்ற புகழினையுடைய அரசவை உன்னைப் புகழ்ந்து வாழ்த்த
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்