Skip to content

சொல் பொருள்

(பெ) 1. பொன், 2. வனப்பு, அழகு,

சொல் பொருள் விளக்கம்

பொன்,

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

gold, loveliness, beauty

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

புனல் ஆடு மகளிர் இட்ட பொலம் குழை – பெரும் 312

நீராடுகின்ற மகளிர் (நீரில்)நழுவவிட்டுச்சென்ற பொன்னாற் செய்த மகரக்குழையினை

பொலம் செய பொலிந்த நலம் பெறு விளக்கம் – மது 719

பொன்னாற் செய்ததினால் பொலிவு பெற்ற மணிகள் அழுத்தின மோதிரம்

பொன் அம் கண்ணி பொலம் தேர் நன்னன் – பதி 40/14

பொன்னால் செய்த அழகிய தலைமாலை அணிந்த, நேர்த்தியான தேரினைக் கொண்ட நன்னனின்

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *