சொல் பொருள்
(பெ) 1. சோலை, 2. நாட்டின் ஒரு பகுதி
சொல் பொருள் விளக்கம்
சோலை, நாட்டின் ஒரு பகுதி
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
grove, division of a country
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: இன் நகை மேவி நாம் ஆடிய பொழிலே – நற் 187/10 இனிதாக நகை செய்தபடி நாம் விளையாடிய சோலை நாவல் அம் தண் பொழில் வட பொழில் ஆயிடை – பரி 5/8 இந்த நாவலந்தீவு எனப்பட்ட குளிர்ந்த சோலைகளைக் கொண்ட நிலப்பகுதியின் வடக்கிலிருக்கும் பொழிலில் உள்ள
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்