சொல் பொருள்
(பெ) 1. ஆண் குழந்தை, 2. ஆண், ஆள், 3. நல்லவன், சிறந்தவன்
வருமொழியாகவும் ஈறாகவும் வருங்கால் மான் என்று மருவும்
மருமகன் – மருமான்
பெருமகன் – பெருமான்
சொல் பொருள் விளக்கம்
ஆண் குழந்தை,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
son, man, goodman, exalted man
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: என் மகள் ஒருத்தியும் பிறள் மகன் ஒருவனும் தம் உளே புணர்ந்த தாம் அறி புணர்ச்சியர் – கலி 9/6,7 என் மகள் ஒருத்தியும், வேறொருத்தியின் மகன் ஒருவனும் தமக்குத்தாமே காதல் கொண்டு, இப்போது பிறர் அறியும்படி ஒன்றுசேர்ந்தனர், வாழ்வோர் போகிய பேர் ஊர் பாழ் காத்திருந்த தனி மகன் போன்றே – நற் 153/9,10 குடிமக்கள் விட்டு ஓடிப்போன பெரிய ஊரில் பாழ்பட்ட இடங்களைக் காவல்புரிந்து நிற்கும் தனி ஆளைப் போல நீயே பெரு நலத்தையே அவனே நெடு நீர் பொய்கை நடுநாள் எய்தி தண் கமழ் புது மலர் ஊதும் வண்டு என மொழிப மகன் என்னாரே – நற் 290/6-9 நீயோ பெண்மை நலம் மிகுதியாகப் பெற்றவள்; உன் கணவனோ ஆழமான நீரையுடைய பொய்கைக்கு நள்ளிரவில் சென்று குளிர்ச்சியுடன் மணங்கமழும் புதிய மலரில் தேனுண்ணும் வண்டு என்று சொல்வார்கள், அவனை நல்லவன் என்று யாரும் சொல்லமாட்டார்.
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்