சொல் பொருள்
(பெ) இணைபிரியாத நீர்வாழ் பறவைகள்,
சொல் பொருள் விளக்கம்
பார்க்க மான்று
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
a species of aquatic love-birds
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: பூ இடைப்படினும் யாண்டு கழிந்து அன்ன நீர் உறை மகன்றில் புணர்ச்சி போல – குறு 57/1,2 (நீர்ப்பரப்பில் இணையாகப் பறந்து வரும்போது) ஒரு பூ இடையில் வந்தாலும், (அதனால் ஏற்படும் பிரிவினால்) ஓர் ஆண்டு கழிந்ததைப் போன்ற நீரில் வாழும் மகன்றில்களின் சேர்க்கை போல வார் சிறை குறும் கால் மகன்றில் அன்ன உடன்புணர் கொள்கை காதலோரே – ஐங் 381/3-5 நீண்ட சிறகுகளையும், குட்டையான கால்களையும் கொண்ட மகன்றில் பறவையைப் போல சேர்ந்தே இருக்கும் கொள்கையினையுடைய காதலர்கள்! அலர் ஞெமல் மகன்றில் நன்னர் புணர்ச்சி – பரி 8/44 மலர்களினூடே திரியும் மகன்றில் பறவைகளின் நல்ல புணர்ச்சியைப் போன்ற
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்