Skip to content

சொல் பொருள்

(பெ) 1. மனிதர்கள், 2. ஒருவருக்குப் பிறந்தவர்கள், மகன்,மகள் ஆகியோர்,

சொல் பொருள் விளக்கம்

மனிதர்கள்

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

people, human beings

children, sons and daughters

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

அத்தம் நண்ணிய அம் குடி சீறூர்
மக்கள் போகிய அணில் ஆடு முன்றில் – குறு 41/3,4

பாலை வழிக்கு அருகிலுள்ள அழகிய சிற்றூரில்
மனிதர்கள் கைவிட்டுப்போனபின், அணில்கள் ஓடியாடும் முற்றத்தையுடைய

மாண்ட என் மனைவியோடு மக்களும் நிரம்பினர் – புறம் 191/3

என்னுடைய மாட்சிமைப்பட்ட குணங்களையுடைய மனைவியுடனே புதல்வரும் அறிவு நிரம்பினர்

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *