சொல் பொருள்
(பெ) அறிவின்மை, அறியாமை,
சொல் பொருள் விளக்கம்
அறிவின்மை, அறியாமை,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
stupidity, ignorance
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: அளியரோ அளியர் தாமே அளி இன்று ஏதில் பொருள்_பிணி போகி தம் இன் துணை பிரியும் மடமையோரே – அகம் 43/13-15 (நிச்சயமாய்) இரங்கத்தக்கவராவர் – இரக்கமின்றி அயல்நாட்டுப் பொருளீட்டும் ஆசையால் பிரிந்து சென்று தம்முடைய இனிய துணையைப் பிரியும் அறிவில்லாதோர் தண் பெரும் பவ்வம் அணங்குக தோழி மனையோள் மடமையின் புலக்கம் அனையேம் மகிழ்நற்கு யாம் ஆயினம் எனினே – குறு 164/4-6 குளிர்ந்த பெரிய கடல் என்னை வருத்துவதாக! தோழி! இல்லாள் அறியாமையில் ஊடல்கொள்ளும் தன்மையுடைவளாய், தலைவனுக்கு நான் ஆகிவிட்டேன் என்றால்.
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்