Skip to content

சொல் பொருள்

(பெ) 1. மடப்பம், பேதமை, கபடமின்மை,  2. மடப்பம் பொருந்தியவள், 

சொல் பொருள் விளக்கம்

மடப்பம், பேதமை, கபடமின்மை,

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

Simplicity, artlessness, credulity, guilelessness

a lady possessing simplicity and artlessness

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

மடவரல் மகளிர் பிடகை பெய்த
செவ்வி அரும்பின் பைம் கால் பித்திகத்து – நெடு 39,40

பேதைமை (மிக்க)பெண்கள் — (தம் கையிலுள்ள) பூத்தட்டுகளில் பறித்துப்போட்ட
(மலரும்)பக்குவத்திலுள்ள மொட்டுக்களின் பசிய காலினையுடைய பிச்சியின்

ஒண் தொடி மடவரல் கண்டிகும் கொண்க – ஐங் 194/2

ஒளிரும் தோள்வளைகளைக் கொண்ட மடப்பம் பொருந்தியவளைக் காண்பாயாக தலைவனே!

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *