சொல் பொருள்
(பெ) கள்,
மட்டம் – குறைவு
சொல் பொருள் விளக்கம்
மட்டம் என்பது சமமானது. ஒப்புரவானது என்பது பொருள். மட்டப்பலகை, பூச்சுமட்டப்பலகை, மட்டம் பார்த்தது, என் மட்டம் என்பவையெல்லாம் சம நிலைப்பொருள். இப்பொருளை விடுத்துக், குறைவு என்னும் பொருள் தருதலும் வழக்கில் உண்டு. “அவன் மட்டமானவன்” என்றால் சமநிலையாளன், ஒப்புரவாளன் எனப் பொருள் தராமல், கீழானவன். குறைவானவன் என்னும் பொருள் தருவதாம். மட்டமாகப் பேசிவிட்டான் என்றால் இழிவாகப் பேசிவிட்டான் என்பது பொருளாம்.
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
toddy
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: மட்டம் பெய்த மணி கலத்து அன்ன இட்டு வாய் சுனைய பகு வாய் தேரை – குறு 193/1,2 கள்ளை எடுத்துவைத்த நீல நிறக்குப்பியைப் போல் சிறிய வாயையுடைய சுனையில் உள்ள பிளந்த வாயையுடைய தேரைகள்
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
இது ஒரு வழக்குச் சொல்.
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்