Skip to content
மணியம்

மணியம் என்பதன் பொருள்அதிகாரம்,அதிகாரி

1. சொல் பொருள்

மணியம் செய்தல் – அதிகாரம் பண்ணல்

அதிகாரம்

அதிகாரி

மொழிபெயர்ப்புகள்

2. ஆங்கிலம்

Manage

Munsif, Manager, Officer

3. சொல் பொருள் விளக்கம்

அம்பலம், மன்றாடி, நாட்டாண்மை, ஊராளி, மணியக்காரர் என்பனவெல்லாம் ஊராட்சி மேற்கொண்டிருந்தவர்களின் தகுதிப்பட்டங்கள். ஆங்கில அரசின் காலத்தில் ஊராட்சி ‘கிராம மணியம்’ (Village Munsif) என்னும் அரசுப் பதவிப் பெயராக வாய்த்தது. ஊர் நடவடிக்கை எல்லாமும் மணியத்தைச் சார்ந்தே இருந்தது. அதனால் அதிகாரம் செய்தல் என்னும் பொருள் மணியத்திற்கு உண்டாயிற்று. அவ்வழக்கால் “உன் மணியம் பெரிய மணியமாக இருக்கிறது” “நீ யெல்லாம் மணியம் செய்தால் ஊர் என்னாவது? என்றெல்லாம் வழக்குகள் உண்டாயின.

இது ஒரு வழக்குச் சொல்.

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *