சொல் பொருள்
(பெ) 1. திங்கள், சந்திரன்,
2. முழுநிலவு,
சொல் பொருள் விளக்கம்
திங்கள், சந்திரன்,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
moon
full moon
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: ஒண் சுடர் ஞாயிற்று விளக்கத்தான் ஒளி சாம்பும் நண்பகல் மதியம் போல் நலம் சாய்ந்த அணியாட்கு – கலி 121/17,18 ஒளிரும் சுடரினைக் கொண்ட ஞாயிற்றின் பிரகாசத்தால் தன் ஒளி மங்கித் தோன்றும் நண்பகலில் காணப்படும் திங்களைப் போல் தன் பொலிவிழந்த இந்த அழகிக்கு; கோடு கூடு மதியம் இயல்_உற்று ஆங்கு – பதி 31/12 பிறைநிலவின் கொம்புகள் கூடிநிற்கும் முழுமதி வானத்தில் ஊர்ந்துவந்தாற் போன்று
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்