சொல் பொருள்
(சொல்லிசை அளபெடை – பெ.அ) 1. மதர்த்த, மருண்ட, 2. மதர்த்த, செருக்கிய
சொல் பொருள் விளக்கம்
மதர்த்த, மருண்ட
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
bewildered
proud, elegant
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: மாரி வீழ் இரும் கூந்தல் மதைஇய நோக்கு எழில் உண்கண் – கலி 131/21 கார்மேகம் விரும்பும் கரும் கூந்தலையும், மருண்ட பார்வையினைக் கொண்ட அழகிய மையுண்ட கண்களையும் (இராசமாணிக்கனார் உரை) மாவின் மடம் கொள் மதைஇய நோக்கின் ஒடுங்கு ஈர் ஓதி மாஅயோளே – அகம் 86/29-31 மானின் மடத்தினைக் கொண்டதும் செருக்கினையுடையதுமான நோக்கினையும் ஒடுங்கிய குளிர்ந்த கூந்தலினையும் உடைய மாமை நிறத்தினையுடையோள் (வேங்கடசாமி நாட்டார் உரை)
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்