சொல் பொருள்
(பெ.அ) மன்னும் என்பதன் குறுக்கல் விகாரம்,
மன்னு – நிலைபெறு
சொல் பொருள் விளக்கம்
மன்னும் என்பதன் குறுக்கல் விகாரம்,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
the shortened form of the word ‘mannum’
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: நச்சல் கூடாது பெரும இ செலவு ஒழிதல் வேண்டுவல் சூழின் பழி இன்று மன்னவன் புறந்தர வரு விருந்து ஓம்பி தன் நகர் விழைய கூடின் இன் உறல் வியன் மார்ப அது மனும் பொருளே – கலி 8/19-23 பொருள் மீது ஆசை கூடாது பெருமானே!, இந்தப் பயணத்தைக் கைவிடும்படி வேண்டுகிறேன், ஆராய்ந்து பார்த்தால் இது தவறல்ல, மன்னவன் பேணிப்பாதுகாக்க, வீட்டுக்கு வரும் விருந்தினரை உபசரித்து, தன் மனைவி மக்கள் விரும்பும்படி, அவருடன் சேர்ந்திருப்பது, இனிய நெருக்கமான உறவினுக்குரிய அகன்ற மார்பினையுடையவனே! அதுவே நிலைத்த பொருளும் ஆகும்
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்