சொல் பொருள்
(பெ) பார்க்க: மன்றம்
சொல் பொருள் விளக்கம்
பார்க்க: மன்றம்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: மனை உறை புறவின் செம் கால் சேவல் இன்புறு பெடையொடு மன்று தேர்ந்து உண்ணாது – நெடு 45,46 வீட்டில் வாழும் புறாவின் சிவந்த காலினையுடைய சேவல் (தான்)இன்பம் நுகரும் பெடையொடு நாற்சந்தியில் (இரை)தேடி உண்ணாமல் அடு புலி முன்பின் தொடு கழல் மறவர் தொன்று இயல் சிறுகுடி மன்று நிழல் படுக்கும் – அகம் 75/6,7 கொல்லும் புலி போலும் வலியையும் கட்டப்பெற்ற கழலையுமுடைய மறவர்கள் பழையதாய் வருகிற இயல்பையுடைய தமது சீறூரிலுள்ள மன்றத்தி நிழலிலே கண்படுக்கும் மன்று பாடு அவிந்து மனை மடிந்தன்றே – அகம் 128/1 ஊர் மன்றம் தன் ஒலி அடங்க மனைகளும் துயின்றன சீர் மிகு நெடுவேள் பேணி தழூஉ பிணையூஉ மன்று-தொறும் நின்ற குரவை – மது 614,615 புகழ் மிக்க முருகனை வழிபடுதலால், தழுவிக் கைகோத்து, மன்றங்கள்தோறும் நின்ற குரவைக்கூத்தும்
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்