சொல் பொருள்
(பெ) பார்க்க : மறம்
சொல் பொருள் விளக்கம்
பார்க்க : மறம்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: மனை உறை கோழி மறன் உடை சேவல் – அகம் 277/15 மனையில் உறையும் கோழியின் தறுகண்மையை உடைய சேவலின் நின்ற துப்பொடு நின் குறித்து எழுந்த எண் இல் காட்சி இளையோர் தோற்பின் நின் பெரும் செல்வம் யார்க்கு எஞ்சுவையே அமர் வெம் செல்வ நீ அவர்க்கு உலையின் இகழுநர் உவப்ப பழி எஞ்சுவையே அதனால் ஒழிக தில் அத்தை நின் மறனே – புறம் 213/14-19 நிலைபெற்ற வலியோடு நின்னைக் கருதிப் போர்செய்தற்கு எழுந்திருந்த சூழ்ச்சியில்லாத அறிவையுடைய நின் புதல்வர் தோற்றால் நினது பெரிய செல்வத்தை யாவர்க்குக் கொடுப்பாய், போரை விரும்பிய செல்வனே! நீ அவர்க்குத் தோற்றால் நின்னை இகழும் பகைவர் உவப்ப பழியை உலகத்தே விட்டுச்செல்வாய் அதனால், ஒழிவதாக நின்னுடைய கொலைவெறி திறன் இலோர் திருத்திய தீது தீர் கொள்கை மறனும் மாற்றலர்க்கு அணங்கும் நீ – பரி 1/42,43 திறனில்லாதவர்களைத் திருத்திய தீமை பயக்காத கொள்கையையுடைய மாற்றாரை எதிர்த்தழிக்கும் வலிமையும், உன்னை மறுதலிப்போருக்கு அச்சத்தை உண்டாக்கும் அணங்கும் நீ!
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்